UPDATED : அக் 06, 2015 12:00 AM
ADDED : அக் 06, 2015 10:51 AM
திருப்பூர்
: காலாண்டு
விடுமுறைக்கு பின், பள்ளிகள் நேற்று
திறக்கப்பட்டதும், கல்வித்துறை
அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
முதல் பருவ தேர்வு விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில், இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள், நேற்று வழங்கப்பட்டன. இவை, முறையாக மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது.
முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர், தனித்தனியாக பள்ளிகளுக்கு சென்றனர். ஜெய்வாபாய், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, கே.எஸ்.சி., அரசு பள்ளி, பிஷப் உபகாரசாமி பள்ளி உள்ளிட்டவற்றில், ஆய்வு நடைபெற்றது. பாடப்புத்தகங்கள், சீருடை இருப்பு மற்றும் வினியோகம் குறித்து, தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்ததோடு, தாமதமின்றி வழங்க அறிவுறுத்தினர்.
