UPDATED : அக் 07, 2015 12:00 AM
ADDED : அக் 07, 2015 10:37 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை
மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் 2 லட்சம் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
காலாண்டு தேர்வு
விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் பள்ளிகள்
திறக்கப்பட்டன. ஆறு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள ஒரு லட்சத்து 723 மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாடப்
புத்தகங்கள் மற்றும் இலவச நோட்டுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாட்டை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி செய்திருந்தார்.
தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட அனைத்து கல்வி ஒன்றியங்களிலும், இலவச புத்தகம், நோட்டு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ராஜாமணி ஏற்பாடு செய்தார்.
