UPDATED : அக் 12, 2015 12:00 AM
ADDED : அக் 12, 2015 10:46 AM
அ நிறம் | அளவு
லக்னோ
: உத்தர
பிரதேசத்தில், ஆசிரியரின்தொந்தரவு காரணமாக, பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கொண்டா
மாவட்டத்தில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த,
அந்த மாணவி, சமூக வலைதளமான, பேஸ்புக் மூலம், பெரும் நட்பு வட்டாரத்தை
வைத்திருந்தார். இந்த நட்பு வட்டாரத்தில், தன் ஆசிரியர்
ஒருவரும் இடம் பெற்றிருந்தது, அந்த மாணவிக்கு தாமதமாக தெரியவந்தது.
இதையடுத்து, ஆசிரியருடனான நட்பை, மாணவி துண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர், மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், தற்கொலை செய்யும் விபரீத முடிவை, அந்த மாணவி எடுத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
