UPDATED : அக் 12, 2015 12:00 AM
ADDED : அக் 12, 2015 10:52 AM
மனிதனிடம் தன்னம்பிக்கையை விதைக்கும் ஆயுதம் புத்தகம் தான், என, புத்தக கண்காட்சியில், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.
புளியம்பட்டி,
நகராட்சி மண்டபத்தில், புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. தினமும் மாலையில், சொற்பொழிவு நடக்கிறது. நேற்று முன்தினம், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், நெசவாளர்கள் குறித்து எழுதிய, தறிநாடா, சப்பரம் ஆகிய நுால்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறும்பட இயக்குனர் பாரதி
கிருஷ்ணகுமார், மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் தலைப்பில், பேசியதாவது:
புத்தக
கண்காட்சிகள், இளைய தலைமுறைக்கு வாசிக்கும் பழக்கத்தை
கற்றுக் கொடுக்கின்றன. புத்தகம் என்பது வெறும் காகிதமோ, மையோ, எழுத்தோ கிடையாது. அது நம்
முன்னோர்களின் பண்பாடு; வரலாற்று தலைவர்களின் வாழ்க்கை. எல்லா
பருவத்துக்கும் ஏற்ற நம் வாழ்க்கை முறையை போதிப்பது, தமிழ் வழியிலான புத்தகங்களே. ஒரு வரியில், ஆத்திசூடி, இரு வரியில், திருக்குறள், மூன்று வரியில் திரிகடிகம், நான்கு வரியில்நாலடியார், ஐந்து வரியில் சிறு பஞ்சமூலம், ஆறு வரியில் ஏனாதி என எத்தனையோ புத்தகங்கள் உள்ளன.
தியாகங்களை செய்து காட்டிய இந்திய விடுதலை போராட்ட வீரர்களை நம் கண் முன் காட்டியது புத்தகங்களே. புத்தகங்கள் அறியாமை என்னும் இருளை நீக்கி, வாழ்வில் ஒளியேற்றுகின்றன. மனிதனிடம் தன்னம்பிக்கை விதைக்கும் ஆயுதமாக புத்தகங்கள் திகழ்கின்றன. புத்தகங்கள் அறிவியல், இலக்கியம், நாடுகளின் வரலாறு, முன்னோரின் பண்பாடு, கலாசாரம் என அனைத்தையும் பேசுகின்றன. மனிதனை மானுடன் ஆக்குவது நாம் படிக்கும் புத்தகங்களே. சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவாக உயர்த்தியது புத்தகம் தான்.
இவ்வாறு பாரதி
கிருஷ்ண குமார் பேசினார். விடியல் அமைப்பு சார்பில், நடக்கும் இந்த புத்தக கண்காட்சி வரும்,
18ம் தேதி வரை, தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.
