UPDATED : அக் 14, 2015 12:00 AM
ADDED : அக் 14, 2015 10:49 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி
:
அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி
கல்வித்துறை சார்பாக, தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு
மகளிர் உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை
போட்டி நடந்தது.
இதில், 6 வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில், 30 பேரும், கட்டுரைப் போட்டியில், 25 பேரும் பங்கேற்றனர். 9ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில், 37 பேரும், கட்டுரைப் போட்டியில், 42 பேரும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், வரும், 15ம் தேதி, சென்னையில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
