UPDATED : அக் 14, 2015 12:00 AM
ADDED : அக் 14, 2015 04:05 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு
:
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் வடமேற்கு பகுதியான கோராகுண்டேபால்யா பகுதியில்
புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, அங்கு கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, தினமும் தான் பள்ளிக்கு செல்ல தாமதம் ஏற்படுவதாகவும், இதன்காரணமாக, மேம்பாலப் பணிகளை பிரதமர் அலுவலகம் கண்காணிக்க வேண்டும் என்று 3ம் வகுப்பு மாணவன் அபினவ் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளான்.
