தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் மேம்பாட்டு திட்டங்கள்

பள்ளிகளில் மேம்பாட்டு திட்டங்கள்

பள்ளிகளில் மேம்பாட்டு திட்டங்கள்


UPDATED : அக் 15, 2015 12:00 AM

ADDED : அக் 15, 2015 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2015 12:00 AM ADDED : அக் 15, 2015 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்
: மாமல்லபுரம்
, நடுநிலைப் பள்ளி கணினி அறை கட்டடத்தை, சென்னை அணுமின் நிலைய இயக்குனர் கோட்டீஸ்வரன், நேற்று திறந்து வைத்தார்.

மாமல்லபுரத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவை, வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. மேல்நிலைப் பள்ளி, பல ஆண்டுகளாக சுற்றுச்சுவர் இன்றி திறந்தவெளியில் இயங்கி வந்தது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர், நடுநிலைப் பள்ளிக்கு கணினி வகுப்பறை கட்டடம் ஆகியவை அமைக்க கோரி, பள்ளி நிர்வாகத்தினர் சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

இதையேற்ற நிலைய நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தன்னிறைவு திட்டத்தின்கீழ், திட்டத்தை மேற்கொள்ள முடிவெடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தது. திட்ட மதிப்பீடான, 26 லட்சம் ரூபாயில், மூன்றில் ஒரு பங்கான, 8.66 லட்சம் ரூபாயை, அணுமின் நிலைய நிர்வாகம் வழங்கியது. தற்போது சுற்றுச்சுவர், கணினி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நடுநிலைப் பள்ளிக்கு, நிலைய நிர்வாகம் சார்பில், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில், கணினிகள், அச்சுப்பொறி ஆகியவையும் வழங்கப்பட்டது.நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்த திறப்பு விழாவில், அணுமின் நிலைய இயக்குனர் கோட்டீஸ்வரன், கணினி வகுப்பறையை திறந்து வைத்து, மாணவ, மாணவியருக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கினார்.பேரூராட்சி தலைவர் கோதண்டபாணி, நிலைய சமூக பொறுப்புக்குழு தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us