தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., கரக்பூர் நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஐ.ஐ.டி., கரக்பூர் நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஐ.ஐ.டி., கரக்பூர் நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்


UPDATED : அக் 15, 2015 12:00 AM

ADDED : அக் 15, 2015 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2015 12:00 AM ADDED : அக் 15, 2015 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: மேற்கு வங்க மாநிலம்
, கரக்பூரில் உள்ள, ஐ.ஐ.டி., சார்பில், நாடு முழுவதும், பொறியியல் கல்லுாரிகளில், தொழில் முனைவோருக்கான சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. 

இதில், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுயதொழில்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்திய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., கரக்பூர் சார்பில், இன்ஜி., மாணவர்களுக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை, காளவாக்கத்தில் உள்ள, எஸ்.எஸ்.என்., இன்ஜி., கல்லுாரியில், நேற்று முன்தினம், கருத்தரங்கம் நடந்தது.

இதில், சுலேகா டாட்காம் முதன்மை செயல் அதிகாரி சத்யபிரபாகர், ஸ்டார்ட் அப் பட்டி நிறுவன மாணவர் வழிகாட்டுனர் வேணுகோபால், ரீல் பாக்ஸ் நிறுவன இணை நிறுவனர் நேரு நாராயணன் மற்றும், எஜுகில்ட் முதன்மை செயல் அதிகாரி ரிஷி கபால் ஆகியோர் பங்கேற்றனர். படிப்பு முடித்ததும், மாணவர்கள் நேரடியாக பணியில் சேர்வது மட்டுமின்றி, தொழில்நுட்ப அடிப்படையில் புதுமையை புகுத்தி, சுயதொழில் துவங்குவது குறித்தும், பயிற்சி அளிக்கப்பட்டது. இன்ஜி., மாணவர்கள் துவங்கும், சுய தொழில்கள் தான், பின்னாளில் பெரிய, கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறியுள்ளதை, உதாரணத்துடன் விளக்கினர். 

இதுபோன்ற கருத்தரங்குகளில், 2013ல், 23 ஆயிரம் பேர்; 2014ல், 20 ஆயிரம் பேர் பங்கேற்று உள்ளனர். மறைந்த, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 2020ல் வல்லரசு இந்தியா என்ற கனவை நனவாக்கும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என, ஐ.ஐ.டி., கரக்பூர் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us