தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில கல்லூரியில் தேர்தல் பேச்சு தோல்வி

மாநில கல்லூரியில் தேர்தல் பேச்சு தோல்வி

மாநில கல்லூரியில் தேர்தல் பேச்சு தோல்வி


UPDATED : அக் 16, 2015 12:00 AM

ADDED : அக் 16, 2015 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2015 12:00 AM ADDED : அக் 16, 2015 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: சென்னை மாநிலக் கல்லுாரியில்
, உண்ணாவிரதம் நடத்திய மாணவர்களுடனான பேச்சு, தோல்வி அடைந்தது. 

மாணவர்கள் இன்று இரண்டாம் நாள் போராட்டத்தை, நடத்த முடிவு செய்துள்ளனர். மாநிலக் கல்லுாரியில், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்; இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்த வலியுறுத்தி, கல்லுாரி வளாகத்தில் நேற்று, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது, எம்.ஏ., வரலாறு படிக்கும் மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின் மாணவர்களுடன், கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் உஷாராணி, மண்டல இணை இயக்குனர் கன்னிகா மற்றும் முதல்வர் பிரம்மானந்த பெருமாள் ஆகியோர் பேச்சு நடத்தினர்.

அதில், மாணவர் பிரதிநிதி தேர்தல் நடத்த மட்டும், கல்லுாரி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆனால், மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், மாணவர்கள் பேச்சில் இருந்து வெளியேறினர். இன்று, இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us