டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இ சென்டர்களில் விண்ணப்பம்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இ சென்டர்களில் விண்ணப்பம்
UPDATED : அக் 19, 2015 12:00 AM
ADDED : அக் 19, 2015 10:47 AM
திருவள்ளூர்
: திருவள்ளூர்
மாவட்டத்தில் செயல்பட்டு வரும், அரசு இ-சேவை மையங்களில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு,
விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
திருவள்ளூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம், இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர பதிவு செய்தல்; தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல்; விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகள், புதியதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த சேவைகளை பயன்படுத்தி, குறைந்த செலவில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
