UPDATED : அக் 20, 2015 12:00 AM
ADDED : அக் 20, 2015 10:17 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக
மதிப்பெண் பெற வைக்கும் நோக்கத்தில், கல்வித் துறை
சார்பில் தேர்வு செய்யப்பட்ட 300 மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி (டான்
எக்ஸல்) நேற்று துவங்கின.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மூன்று கல்வி மாவட்டங்களிலும் பயிற்சி நடக்கிறது. செக்கானுாரணியில் முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் துரைப்பாண்டி, மதுரை ஈ.வெ.ரா., மாநகராட்சி பள்ளியில் ஆர்.எம்.எஸ்.ஏ., உதவித் திட்ட அலுவலர் அமுதா துவக்கினர்.
ஏற்கனவே நன்கு படித்து மதிப்பெண் பெறும் இம்மாணவர்களுக்கு, பாடவாரியான சிறப்பு ஆசிரியர்கள் மூலம் 50 பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
