தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு; அக்.,26ல் துவக்கம்

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு; அக்.,26ல் துவக்கம்

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு; அக்.,26ல் துவக்கம்


UPDATED : அக் 20, 2015 12:00 AM

ADDED : அக் 20, 2015 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2015 12:00 AM ADDED : அக் 20, 2015 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்
: அரசு உயர்நிலை
, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது. 

இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:

அக்.,26ல் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை 2க்கு மாவட்டத்திற்குள் மாறுதல்; அக்.,27ல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இணையதளம் மூலம் அக்.,30ல் நடக்கிறது. மனமொத்த மாறுதல் கோரும் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு அக்.,2௦ல் மாறுதல் வழங்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பம் அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் செய்தி

பல அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us