தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாலை ஆய்வாளர் போட்டித் தேர்வு

சாலை ஆய்வாளர் போட்டித் தேர்வு

சாலை ஆய்வாளர் போட்டித் தேர்வு


UPDATED : அக் 23, 2015 12:00 AM

ADDED : அக் 23, 2015 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2015 12:00 AM ADDED : அக் 23, 2015 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலகில்
, பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், நான்கு சாலை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொதுப்போட்டியில், முன்னுரிமையற்ற, ஆதரவற்ற விதவை மற்றும் தமிழ்வழி பயின்ற பெண்கள், தலா ஒருவர் தேர்வு செய்யப்படுவர். பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட, தமிழ்வழி பயின்ற பெண்கள், இரண்டு இடங்களில் நியமிக்கப்படுவர். ஐ.டி.ஐ., (சிவில் டிராப்ட்ஸ்மென்) முடித்த, 18 முதல், 35 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வெள்ளைத்தாளில் எழுதிய விண்ணப்பத்துடன், கல்வித்தகுதிக்கான சான்று நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். 

நவ., 5 மாலை, 5:45 மணிக்குள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரிக்கு, அனுப்ப வேண்டும். போட்டித் தேர்வுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us