தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைக் கல்லூரிக்கு பள்ளியில் முதல் தளம்

கலைக் கல்லூரிக்கு பள்ளியில் முதல் தளம்

கலைக் கல்லூரிக்கு பள்ளியில் முதல் தளம்


UPDATED : அக் 24, 2015 12:00 AM

ADDED : அக் 24, 2015 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2015 12:00 AM ADDED : அக் 24, 2015 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: ஆர்.கே.நகர் தொகுதியில்
, சென்னை மாநகராட்சி பள்ளியில், புதிதாக கலைக் கல்லுாரி துவங்க அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, பள்ளியின் முதல்தளம் முழுவதும்,கல்லுாரிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கூடுதல் கட்டடங்கள்:

முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில், சென்னை மாநகராட்சி பள்ளியில் கலைக்கல்லுாரி துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்லுாரி, நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட உள்ளது. மூன்று பாட பிரிவுகள் துவக்கப்பட உள்ளன. அதற்காக, மாநகராட்சி பள்ளி வளாகத்தின் முதல்தளத்தில், ஆறு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட பள்ளியின் தரைதளத்தில், ஐந்து வகுப்பறைகள் உள்ளன. அந்த பள்ளியில் தற்போது, 70 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு தரைதளத்தில் உள்ள வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டிற்குள், கூடுதல் கட்டடங்கள் கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us