UPDATED : அக் 26, 2015 12:00 AM
ADDED : அக் 26, 2015 11:11 AM
சென்னை:
கல்வி மற்றும் சிறுதொழில் துவக்க, சிறுபான்மையினருக்கு
கடன் உதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சுய உதவிக்குழுவில், 60 சதவீதம் சிறுபான்மையினர், 40 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி வழங்கப்படும். புதிதாக தொழில் துவக்க ஒரு குழுவிற்கு, 20 லட்சம் ரூபாயும், நபர் ஒருவருக்கு சிறுதொழில் வணிகத்திற்கேற்ப, ஒரு லட்சம் ரூபாய், 7 சதவீத வட்டியுடன் கடன் உதவி வழங்கப்படும். தனி நபர் கடன் திட்டத்தின் கீழ், தொழில்கள் துவக்க மற்றும் இலகுரக வாகன கடன், நபர் ஒருவருக்கு, 20 லட்சம் ரூபாய் வரை, 6 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்கப்படும்.
சிறுபான்மை இன
மாணவ, மாணவியர், இளங்கலை தொழிற்கல்வி,
தொழில்நுட்ப கல்வி படிக்க, ஆண்டுக்கு 3
லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும். முதுகலை
தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய்
முதல், 9 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
வெளிநாடுகளில் தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி படிக்க, ஆண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை, ஆண்டுக்கு 3 சதவீத வட்டியுடன் கல்வி கடன் வழங்கப்படும். சுயதொழில் துவக்க தனிநபர் கடன் விதி முறையின்படி, தாய்கோ வங்கி மூலம் ஆட்டோ வழங்கப்படும். இக்கடன் உதவிக்கான விண்ணப்பங்களை சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சென்னை.
இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நவ., 10க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்கலாம்.
