தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சித்தா மாணவர்களுக்கு கெடு!

சித்தா மாணவர்களுக்கு கெடு!

சித்தா மாணவர்களுக்கு கெடு!


UPDATED : அக் 30, 2015 12:00 AM

ADDED : அக் 30, 2015 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2015 12:00 AM ADDED : அக் 30, 2015 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உட்பட, ஐந்து வகையான இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, 1,231 இடங்கள் இருந்தன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 25 முதல், 28ம் தேதி வரை நடந்தது.

இதில், அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், இன்றைக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்; இல்லையெனில், காலியிடமாகக் கருதப்படும் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் மணவாளன் கூறியதாவது:

மாணவர் சேர்க்கைக்கான அனுமதி, 21ம் தேதி தான் கிடைத்தது; உடனடி ஏற்பாடு செய்து, 28க்குள் கலந்தாய்வை முடித்தோம். விதிமுறைப்படி, சேர்க்கையை, 31ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும். நாளை இறுதிகால அவகாசம் இல்லாததால், மாணவர்கள் இன்றைக்குள் கட்டாயம் கல்லுாரியில் சேர வேண்டும். மாணவர் சேராத இடங்களை காலியிடமாகக் கருதி, நாளை இறுதி கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us