தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி குறித்த செயல்களுக்கு முக்கியத்துவம்

கல்வி குறித்த செயல்களுக்கு முக்கியத்துவம்

கல்வி குறித்த செயல்களுக்கு முக்கியத்துவம்


UPDATED : அக் 31, 2015 12:00 AM

ADDED : அக் 31, 2015 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2015 12:00 AM ADDED : அக் 31, 2015 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: புதிய கல்வி கொள்கையில்
, கல்வி தொடர்புடைய செயல் பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அமைச்சர் தியாகராஜன் பேசினார்.

பெங்களூருவில் நடந்த புதிய கல்விக் கொள்கை, தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது: புதுச்சேரி மாநிலம் அனைத்து துறைகளிலும், முன்னோடியாக திகழ்கிறது. கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கல்வி வளர்ச்சி குறியீட்டில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் உள்ளது. துாய்மை இந்தியா, திட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு, தனித்தனி கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக, பள்ளி மேலாண்மை குழு மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில், 98 கூட்டங்கள், வட்டார அளவில் 15, மாநில அளவில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. எனினும், எதிர்கால கல்விக் கொள்கை வளர்ச்சியின் சரியான தேவை குறித்து, முழுமைான ஆலோசனைகள் பெறவில்லை என்று மக்கள் கருதுகின்றனர். 

மாணவர்களை முழுமையாக மேம்பாடு அடைய செய்தல், உள் கட்டமைப்பு வசதிகள், ஐ.சி.டி., இணைப்புடன் கல்வித் திட்டம், திறன் மிக்க பணியிடை பயிற்சி திட்டம், திறன் அடிப்படையில் பதவி உயர்வு கொள்கை, கல்வி தொடர் புடைய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம், தேசியபொது கல்வி திட்டம், தொழிற்சாலைகளுக்கு தேவையான அடிப்படை திறன் மேம்பாடு மற்றும் சமச்சீர் முறையிலான தேர்வு மற்றும் மதீப்பீடு, புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் தியாகராஜன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us