தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் திடீர் மாற்றம்

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் திடீர் மாற்றம்

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் திடீர் மாற்றம்


UPDATED : அக் 31, 2015 12:00 AM

ADDED : அக் 31, 2015 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2015 12:00 AM ADDED : அக் 31, 2015 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: சென்னையில் நடந்த மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில்
, பதிவாளர் ராஜசேகரை விடுவித்து நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்பல்கலையில் ஆறு மாதங்களுக்கு மேலாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. கவர்னர் பிரதிநிதியான பேராசிரியர் முருகதாஸ் தலைமையிலான துணைவேந்தர் தேர்வுக் குழு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே ஐந்து முறை தள்ளிவைக்கப்பட்ட பல்கலை சிண்டிகேட் கூட்டம், சென்னையில் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்கலை பதிவாளர் ராஜசேகர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் மூத்த பேராசிரியர் முத்துமாணிக்கம் நியமிக்கப்படுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாற்றத்திற்கு காரணம் என்ன: பல்கலையில் துணைவேந்தர் இல்லாத நிலையில், பதிவாளர் ராஜசேகருக்கும், சில சிண்டிகேட் மற்றும் கன்வீனர் கமிட்டி உறுப்பினர்களுக்கு இடையே மறைமுக பனிப்போர் நடந்தது. இதன் எதிரொலியாக கன்வீனர் கமிட்டி தலைவரான உயர்கல்வி செயலர் அபூர்வாவிற்கு பல்வேறு புகார்கள் சென்றன.

பல்கலை சிண்டிகேட் கூட்டம் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு, ஐந்தாவது முறையாக நேற்று நடந்த போது சில தீர்மானங்கள் செயலர் கவனத்திற்கு வராமல் இணைக்கப்பட்டதாக செயலர் டென்ஷன் ஆனார். மேலும், இணை பேராசிரியராக ராஜசேகர் பணியாற்றிய கல்லுாரியில் இருந்து பதிவாளராக பொறுப்பேற்ற பின் அதற்கான துணைவேந்தர் ஒப்புதல் பெற்று உயர் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், உரிய (மீளப் பணி) அரசு அனுமதி ஒன்றரையாண்டுகளாக கிடைக்காததால் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

சென்னையில் நடந்த சிண்டிகேட் தீர்மானம் பேக்ஸ் மூலம் நேற்று மாலை பல்கலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு புதிய பதிவாளராக முத்துமாணிக்கம் பொறுப்பேற்றார்.சிண்டிகேட் நடவடிக்கை குறித்து முன்னாள் பதிவாளர் ராஜசேகர் கூறுகையில், பல்கலை பதிவாளராக இருந்தவரை மனசாட்சியுடன் பணியாற்றினேன். வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை, என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us