தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி கூரை இடிந்து 5 மாணவர்கள் காயம்

பள்ளி கூரை இடிந்து 5 மாணவர்கள் காயம்

பள்ளி கூரை இடிந்து 5 மாணவர்கள் காயம்


UPDATED : நவ 04, 2015 12:00 AM

ADDED : நவ 04, 2015 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2015 12:00 AM ADDED : நவ 04, 2015 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துாத்துக்குடி
: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இ.ரெட்டியபட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு
34 மாணவர்கள் படித்து வருகின்றனர். 

பள்ளி கட்டடம் 1988ல் தனியார் நிதி உதவியில் கட்டப்பட்டது. 2013-14 ஆண்டு பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் 2 மாதங்களுக்கு முன் ரூ.1.60 லட்சம் செலவில் மராமத்து பணிகள் நடந்தன.

நேற்று காலை பள்ளி கட்டடத்தில் 24 மாணவர்கள் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். தலைமையாசிரியை சந்திரா, ஜெனிபர் ஆசிரியை மாணவர்களுக்கு கல்வி கற்பித்து கொண்டிருந்தனர். காலை 10.30 மணிக்கு மேற்கூரையில் உள்ள காரைப்பூச்சு திடீரென இடிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் அலறி அடித்து வெளியில் ஓடினர்.

இ.ரெட்டிபட்டி காலனியை சேர்ந்த விஜயக்குமார் மகன் செல்வக்குமார்,8, காப்பில்ராஜ் மகன் பொன்பாண்டி, செல்வராஜ் மகன் விக்னேஷ்பாரதி,8, ஆகியோர் தலை மற்றும் உடலில் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் துாத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜெயக்குமார் மகள் பிருந்தாராணி,8, உக்கிரபாண்டி மகள் பானுபிரியா ஆகியோர் லேசான காயத்துடன் விளாத்திகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர்.

பள்ளி கட்டடம் மோசமான நிலையில் இருப்பதால், அருகில் உள்ள வேறு கட்டடத்திற்கு மாணவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இது போன்ற விபத்துக்கள் தொடர்கின்றன. விபரீதம் ஏற்படும் முன்பு, அதிகாரிகள் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, பழமையான கட்டடங்களை சீர்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us