தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறை!

அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறை!

அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறை!


UPDATED : நவ 05, 2015 12:00 AM

ADDED : நவ 05, 2015 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2015 12:00 AM ADDED : நவ 05, 2015 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை
: தமிழக அளவில் உள்ள அரசு கலை
, அறிவியல் கல்லுாரிகளில் ரூ.100 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. 

இதற்கான விபரங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் சேகரித்து வருகிறது. மாநில அளவில் 72 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்குகின்றன. இதில், 10 கல்லுாரிகளுக்கு மேல் கிரேடு- 1 அந்தஸ்து பெற்றுள்ளன. நடப்பு ஆண்டு பெரும்பாலான கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சில கல்லுாரிகளில் போதிய வகுப்பறைகள் இன்றி மரத்தடியில் வகுப்புகள் நடப்பதாகவும், ஆய்வகம், நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதியில்லை என புகார் எழுந்தது.

ரூ.100 கோடி திட்டம்: 

இந்நிலையில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்த அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை குறித்த பட்டியலை வழங்க, கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கல்லுாரி அலுவலர் ஒருவர் கூறுகையில், கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை,சேர்,மேஜை, அறிவியல் ஆய்வக உபகரணங்கள் தேவை குறித்த அறிக்கை தர அரசு கேட்டதால், சேகரித்து அனுப்பி வருகிறோம். விரைவில் அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us