UPDATED : நவ 07, 2015 12:00 AM
ADDED : நவ 07, 2015 10:52 AM
அ நிறம் | அளவு
கோவை
:
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பருவத் தேர்வுகள் நேற்று நிறைவடைந்தன.
மாநிலம்
முழுவதும், அரசு, அரசு உதவிபெறும், தனியார் என, ௫௨௧ பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் கடந்த,
செப்., ௨௬ முதல் அக்.,
௧௦ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடந்தன.
தொடர்ந்து, அக்., ௧௩ முதல் பருவத்தேர்வுகள் நடந்தன. நேற்றுடன் இத்தேர்வுகள்
நிறைவடைந்தன.
மாணவர்கள் தேர்வு சமயத்தில் முறைகேடுகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த, பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முதலாமாண்டு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் துவங்கியது; வரும், ௧௬ம் தேதி முதல், ௨௨ம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது.
