ஆளுமை, ஆற்றல், வலிமைமிக்க மாணவர் சமுதாயம் ஆசிரியர் கையில்!
ஆளுமை, ஆற்றல், வலிமைமிக்க மாணவர் சமுதாயம் ஆசிரியர் கையில்!
UPDATED : நவ 07, 2015 12:00 AM
ADDED : நவ 07, 2015 11:04 AM
காளையார்கோவில்:
சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் சார்பில்,
அரசு, அரசு உதவி
பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி காளையார்கோவில் புனித
மைக்கேல் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
சி.இ.ஓ.,செந்திவேல்முருகன் தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் நல்ல முகமது,பாலசுப்ரமணியன், கல்லூரி தாளாளர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் மற்றும் 200க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச பல்துறை
தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வின் சுல்தானா பேசியதாவது:
இன்றைய கல்வித் திட்டத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மனித வளமிக்கவர்களாக உருவாக்க வேண்டும். ஆசிரியர்களை வழி நடத்தும் தலைமை ஆசிரியர்கள் எழுச்சி மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். தினமும் பொருளுரையுடன் குறள் வாசிக்க மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். பணம் ஒருவருக்கு தன்னிறைவை தராது. கல்வியால் மட்டுமே வளர்ச்சி பெற முடியும். அதிகாரத்தை பயன்படுத்தாமல், அன்பால் சாதிக்க கற்றுத் தாருங்கள். தன்னை காப்பாற்றி கொள்ளும் திறன் கொண்டவர்களே முதன்மை பெறுகின்றனர். தரமிருந்தால் தேடி வரும் முதலிடம். ஆளுமை, ஆற்றல், வலிமை மிக்க மாணவர் சமுதாயம் உருவாவது ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது,இவ்வாறு அவர் பேசினார்.
