தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்பக்கல்லூரி; 35 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

தொழில்நுட்பக்கல்லூரி; 35 கிராம மக்கள் எதிர்பார்ப்பு

தொழில்நுட்பக்கல்லூரி; 35 கிராம மக்கள் எதிர்பார்ப்பு


UPDATED : நவ 11, 2015 12:00 AM

ADDED : நவ 11, 2015 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2015 12:00 AM ADDED : நவ 11, 2015 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி
: மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு
, நெகமம் பகுதியில் அரசு கலைக்கல்லுாரி அல்லது தொழில்நுட்ப கல்லுாரி அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, 35 கிராம மக்களும், நெகமம் டவுன் பஞ்சாயத்து நிர்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட நெகமம் மற்றும் சுற்றியுள்ள கோவில்பாளையம் (காளியண்ணன்புதுார்),சேரிபாளையம், வடசித்துார், கொல்லபட்டி, காட்டம்பட்டி பகுதிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இதேபோல் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளும் அதிகளவில் உள்ளன. நெகமத்தை சுற்றியுள்ள ராமச்சந்திராபுரம், கோவில்பாளையம், வடசித்துார், பூசாரிபட்டி ஆகிய பகுதிகளுக்கு இடையே 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளி படிப்பை முடித்தவுடன், தனியார் கல்லுாரிகள் இருந்தாலும் கோவை, உடுமலையில் உள்ள அரசு கலை கல்லுாரிக்கு தான் சென்று வருகின்றனர்.

இதனால் பெற்றோருக்கு செலவு தான் கூடுகிறது. இதை தவிர்க்க, 35 கிராமங்களுக்கு மத்தியில் உள்ள நெகமத்தில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் அல்லது அரசு தொழில்நுட்ப கல்லுாரி அமைக்க வேண்டும். தென்னை வளம் மிக்க இப்பகுதி மாணவர்களுக்கு கல்வி வளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இச்சூழலில், நெகமம் பேரூராட்சித்தலைவர் சோமசுந்தரம் தலைமையில் நடந்த கூட்டத்தில் நெகமம் பகுதி மாணவர்களுக்காக, பெற்றோர் நலன் கருதி இப்பகுதியில் அரசு கலைக்கல்லுாரியோ அல்லது தொழில்நுட்ப கல்லுாரியோ அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதோடு, தமிழக அரசின் நடவடிக்கைக்கும் அனுப்பியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us