தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு; மாணவர்கள் மீது நடவடிக்கை

பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு; மாணவர்கள் மீது நடவடிக்கை

பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு; மாணவர்கள் மீது நடவடிக்கை


UPDATED : நவ 12, 2015 12:00 AM

ADDED : நவ 12, 2015 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2015 12:00 AM ADDED : நவ 12, 2015 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநிலத்தில், அரசு, அரசு உதவிபெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகள் என, 521 கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில், செப்., 29 முதல் அக்., 11 வரை செய்முறை தேர்வுகள் நடந்தன. தேர்வு சமயத்தில் கல்லுாரிகளில் போதிய உபகரணங்கள் உள்ளனவா, மாணவர்கள் தேர்ச்சிபெற முறைகேடுகள் நடக்கிறதா என, பறக்கும் படை அதிகாரிகள் மண்டலம் ரீதியாக, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அக்., 12 முதல் கடந்த, 6ம் தேதி வரை பருவத் தேர்வுகள் நடந்தன. இதில், மாணவர்கள் ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனரா என, பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்தனர்.

இந்நிலையில், தேர்வு முறைகேடுகள் குறித்த குழு உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் தற்போது நடந்தது. இயக்குனர் மதுமதி தலைமையில் நடந்த கூட்டத்தில், பறக்கும் படை அதிகாரிகளின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் பருவத்தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட, 950 மாணவர்கள் மீது முறைகேட்டின் தன்மைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 600 மாணவர்களுக்கு, தற்போது எழுதிய பருவத்தேர்வு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது; 350 மாணவர்களுக்கு முறைகேட்டில் ஈடுபட்ட பாடம் மட்டும், ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், போதிய உபகரணம் இல்லாமல் செய்முறைத் தேர்வு நடத்திய மற்றும் தேர்வில் மாணவர்களுக்கு உதவிபுரிந்த, 32 கல்லுாரிகளில், 92 புற, அக தேர்வாளர்களுக்கு ஓராண்டு தேர்வுப் பணியில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us