UPDATED : நவ 12, 2015 12:00 AM
ADDED : நவ 12, 2015 10:59 AM
அ நிறம் | அளவு
சென்னை
: கனமழை காரணமாக, சென்னையில் உள்ள
அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், இன்று விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றும், சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதே போல், அண்ணா பல்கலையின் சார்பில், இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக, பல்கலையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
