கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வேளாண் ஆராய்ச்சிக் குழும அங்கீகாரம்
கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வேளாண் ஆராய்ச்சிக் குழும அங்கீகாரம்
UPDATED : நவ 14, 2015 12:00 AM
ADDED : நவ 14, 2015 10:52 AM
புதுச்சேரி
: புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு கால்நடை
மருத்துவக் கல்லுாரிக்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும
அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என, ஆராய்ச்சிக் குழும துணை தலைமை இயக்குனர் கே.எம்.எல். பதக்
தெரிவித்தார்.
விஜயா வங்கி
அறக்கட்டளை சார்பில், புதுச்சேரி குரும்பாபேட்டில் உள்ள
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரியில், உணவு பாதுகாப்பிற்கான கால்நடை உற்பத்தி எனும் தலைப்பில் கருத்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில்,
கல்லுாரி டீன் ரமேஷ்குமார் வரவேற்றார். கால்நடை
பராமரிப்புத் துறை செயலர் மிகிர்வரதன் வாழ்த்திப் பேசினார்.
தலைமை செயலர்
மனோஜ் பரிதா, தலைமை உரை நிகழ்த்தினார். டில்லி
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும கால்நடை அறிவியல் துறையின் துணை தலைமை இயக்குனர்
கே.எம்.எல். பதக், உணவு பாதுகாப்புக்கான கால்நடை உற்பத்தி எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
அவர் பேசுகையில், ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் கடந்த சில ஆண்டுகளாக பேராசிரியர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. போதிய பேராசிரியர்களை நியமித்தால் மட்டுமே கால்நடை கவுன்சில் அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும். எனவே, கல்லுாரியின் பணி நியமன விதிகளை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும வழிகாட்டுதல்படி நடைமுறைப்படுத்தி, பேராசிரியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்.
விரைவில்,
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தால்
அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகளில், புதுச்சேரி ராஜிவ்காந்தி கால்நடை
மருத்துவ கல்லுாரி இடம் பெறும் என குறிப்பிட்டார். கூட்டத்தில்,
புதுச்சேரி கால்நடைத் துறை இயக்குனர் பத்மநாபன்
மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் பங்கேற்றனர்.பேராசிரியர் ராம்குமார் நன்றி கூறினார்.
