UPDATED : நவ 16, 2015 12:00 AM
ADDED : நவ 16, 2015 10:20 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீ சத்ய சாய் வித்யா வாஹினியின், ஐந்தாவது ஆண்டுவிழா நிகழ்ச்சியானது இன்று(16.11.2015) புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்றது. பாரத திக்விஜயம் மற்றும் பாரடியம் என்ற தலைப்பில், இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வரும் வித்யா வாஹினி பள்ளியில் படிக்கும் சுமார் 1,200 குழந்தைகள், யஜுர் மந்திரத்திலிருந்து சாய் குல்வன்ட் ஹால் வரை, நடைபெற்ற பேரணியில் பங்கேற்றனர்.
விழாவில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள்:
ஆதி சங்கரர் தலைமையில்,கலாச்சாரம், நிலம் மற்றும் ஆன்மீக பாரம்பரியம் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேத கதைகள் , கோவில் புனைவுகள் , இசைக்கருவிகள், வீர கதைகள், தாய்மையின் பெருந்தன்மை, சுதந்திர இயக்கம், இந்திய சுதந்திரப் போராளிகள் பற்றின கதைகள், பகவத் கீதை போன்ற 18 வகையான காட்சி அமைப்புகள் பேரணியில் இடம்பெற்றன. பாரதிய கலாச்சாரத்தில் இடம்பெற்ற ஆன்மீக காட்சிதனித்துவத்தை ஆதி சங்கரர் மாணவர்களிடம் விளக்கினார்.
ஸ்ரீ கே. சக்ரவர்த்தி (நிர்வாக அறங்காவலர்) விழாவை தொடக்கி வைத்து பேசினார். அவரை தொடர்ந்து சந்திரசேகரன் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) சிறப்புரையாற்றினார்.
