போதிய வசதிகள் இல்லாத பள்ளிகளில் தொழில்நுட்பத் தேர்வு
போதிய வசதிகள் இல்லாத பள்ளிகளில் தொழில்நுட்பத் தேர்வு
UPDATED : நவ 17, 2015 12:00 AM
ADDED : நவ 17, 2015 04:03 PM
கோவை
: மாநில அளவில், கலையாசிரியர்களுக்கான தொழில்நுட்ப தேர்வுகள் நாளை துவங்கவுள்ள
நிலையில், கோவை மாவட்டத்தில் போதிய வசதிகள்
இல்லாத பள்ளியை தேர்வு மையமாக அறிவித்துள்ளதாக, புகார் கிளம்பியுள்ளது.
நடப்பு
கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் இத்தேர்வை,
26 ஆயிரத்து 509 பேர் எழுத உள்ளனர். கோவை, நீலகிரி,
திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 317 பேர் எழுதவுள்ளனர்.
கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு,
கோவை ஒண்டிபுதுார் பழைய தபால் நிலையம்
அமைந்துள்ள பகுதியில் செயல்படும், ஆர்.சி. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு
விதிமுறைகளின் படி, ஒரு அறைக்கு, 20 பேர் மட்டுமே அமர்ந்து தேர்வுவெழுத வேண்டும். குறிப்பாக, ஓவிய தேர்வுக்கு உரிய வசதிகளுடன் அறைகள் ஒதுக்கப்பட வேண்டும்.
ஒதுக்கப்பட்டுள்ள
தேர்வு மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள்
நடந்துவருவதால் கலையாசிரியர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. இதுகுறித்து,
கலையாசிரியர்கள் சங்கம் சார்பில், நேற்று முதன்மை கல்வி அலுவலர் மற்றும், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், கடந்த ஆண்டு, தையல், ஓவியத்தேர்வுகளில் தேர்வர்கள் சிரமப்பட்டனர். இடவசதி இல்லாத அறையில், 100க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து ஓவியம் வரைய இயலுமா என்பதை அதிகாரிகள் சிந்திக்காமல், தேர்வு நடத்துகின்றனர். உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், என்றார்.
