UPDATED : நவ 18, 2015 12:00 AM
ADDED : நவ 18, 2015 10:51 AM
அ நிறம் | அளவு
கோவை:
தமிழ்நாடு
வேளாண் பல்கலையின் புதிய துணைவேந்தராக, முன்
னாள் துணைவேந்தரே மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
வேளாண் பல்கலையின், ஒன்பதாவது துணை வேந்தராக பதவி வகித்து வந்த ராமசாமி, ஆக., 26ல் ஓய்வு பெற்றார். புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது.
துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த, 44 பேரில் மூவரை தேர்வு செய்து, தமிழக அரசுக்கு அனுப்பியது. இதில், முன்னாள் துணை வேந்தர் ராமசாமியையே, 10வது துணை வேந்தராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
