UPDATED : நவ 20, 2015 12:00 AM
ADDED : நவ 20, 2015 11:08 AM
அ நிறம் | அளவு
அவிநாசி
: மாநில
கலை இலக்கிய போட்டி தனித்திறன் பிரிவில், கருவலூர் அரசு பள்ளி மாணவன் விஜய
வசந்தன் மூன்றாமிடம் பெற்றார்.
பள்ளிகளுக்கு
இடையே, மாநில அளவிலான கலை இலக்கிய போட்டி, ராமநாதபுரம் வாணி வேலுமாணிக்கம்
மெட்ரிக் பள்ளியில், 17ல் நடைபெற்றது. 19 வயதுக்குட்பட்டோர் தனித்திறன் பிரிவில், கருவலூர் அரசு
மேல்நிலைப்பள்ளி மாணவன் விஜய வசந்தன் மூன்றாமிடம் பெற்றார். சுதந்திர
போராட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தலைப்பில், தனி நபர்
நடிப்பு திறனை வெளிக்காட்டி, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற விஜய வசந்தன் மற்றும்
தமிழாசிரியர்கள் ஆனந்த், காளியப்பன், ஜெயப்பிரகாஷ், மணிமேகலை ஆகியோரை, முதன்மை கல்வி அலுவலர் முருகன், தலைமை ஆசிரியர் சுந்தரம் உள்ளிட்டோர்
பாராட்டினர்.
