பல்கலை பேராசிரியர்கள் நியமனம் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
பல்கலை பேராசிரியர்கள் நியமனம் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
UPDATED : நவ 27, 2015 12:00 AM
ADDED : நவ 27, 2015 11:27 AM
மதுரை
:
அண்ணா பல்கலை பேராசிரியர்கள் நியமன
அறிவிப்பை எதிர்த்து தாக்கலான வழக்கில், பதிவாளர்
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உயர்நீதிமன்ற
மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார்: சென்னை அண்ணா பல்கலை பதிவாளர் நவ.,8 ல் 102 பேராசிரியர், 178 இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார். விதிகள்படி பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப்பணியிடங்களில் 75 சதவீதத்தை, ஏற்கனவே பணி புரிவோருக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். 25 சதவீதம் நேரடி நியமனம் செய்ய வேண்டும். விதிகளுக்குப் புறம்பாக,நேரடி நியமனம் மூலம் நிரப்ப பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, இதுபோல் வெளியான அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், இறுதித் தீர்ப்பை பொறுத்து நியமனம் இருக்கும், என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தற்போது அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம். அதை ரத்து செய்து பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 75 சதவீதம் பதவி உயர்வு, 25 சதவீதம் நேரடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராஜ்குமார் மனு செய்திருந்தார்.நீதிபதி டி.ஹரிபரந்தாமன், அண்ணா பல்கலை பதிவாளர் தற்போதைய நிலை பற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,என்றார். மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.
