தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திண்டுக்கல்லில் நான்காவது புத்தகத் திருவிழா துவக்கம்

திண்டுக்கல்லில் நான்காவது புத்தகத் திருவிழா துவக்கம்

திண்டுக்கல்லில் நான்காவது புத்தகத் திருவிழா துவக்கம்


UPDATED : நவ 28, 2015 12:00 AM

ADDED : நவ 28, 2015 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2015 12:00 AM ADDED : நவ 28, 2015 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்
: திண்டுக்கல்லில் நான்காவது புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது.

திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் டட்லி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று முதல் டிச.6 வரை புத்தக திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை மைதானத்தில், திண்டுக்கல் வாசிக்கிறது என்னும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்று பத்திரிகைகள், புத்தகங்களை வாசித்தனர். மாலையில் நடந்த விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஹரிபரந்தாமன் புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். 

கலெக்டர் ஹரிஹரன், கனிமவள நிர்வாக இயக்குனர் வள்ளலார், இலக்கிய களம் தலைவர் குருவம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் கண்காட்சியில், 110 ஸ்டால்கள் உள்ளன. இலக்கியம், அறிவியல், கணிதம், வரலாறு, பொது அறிவு, சமையல், வர்த்தகம், கவிதை, கட்டுரை என பல்வேறு துறைசார்ந்த லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. பல கடைகளில் புத்தகத்திற்கு 10 சதவீத தள்ளுபடியும் உண்டு.

இவ்விழாவில் ரூ.250க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு, நுால் ஆர்வலர், ரூ.500க்கு மேல் வாங்கினால் வாசிப்பை நேசிப்பவர், ரூ.ஆயிரத்துக்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் வாசிப்பு திலகம், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் வாங்கினால் வாசிப்பு செம்மல் என்ற பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தினமும் கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும். அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us