UPDATED : நவ 30, 2015 12:00 AM
ADDED : நவ 30, 2015 11:07 AM
சென்னை
: தமிழகம்
முழுவதும் நடந்த போலீசுக்கான எழுத்துத் தேர்வில், இளைஞர் காவல் படையினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில், இளைஞர் காவல் படையினர், 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேர்வு நடத்தி, இரண்டாம் நிலை போலீசாராக தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது.
அதன்படி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், மாநிலம் முழுவதும், 12 மையங்களில் நேற்று எழுத்துத் தேர்வு நடந்தது. சென்னை அண்ணா பல்கலையில், 2,173 பேர், காஞ்சிபுரத்தில் நடந்த தேர்வில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 370 பேர் என, தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு மிகவும் எளிதாக இருந்தது; எப்படியும் நேரடி போலீஸ் பணி கிடைத்துவிடும் என, தேர்வர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
