தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெயித்துக்காட்டுவோம் கோவையில் நிறைவு

ஜெயித்துக்காட்டுவோம் கோவையில் நிறைவு

ஜெயித்துக்காட்டுவோம் கோவையில் நிறைவு


UPDATED : நவ 30, 2015 12:00 AM

ADDED : நவ 30, 2015 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2015 12:00 AM ADDED : நவ 30, 2015 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை  பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கி தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக, தினமலர் கல்விமலர் சார்பில், கோவையில், கடந்த இரண்டு நாட்கள் நடந்த, ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நேற்று நிறைவுபெற்றது.

இந்நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன், எஸ்.என்.எஸ்.கல்வி நிறுவனம், ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி ஆகியவை இணைந்து வழங்கின. நிகழ்ச்சியில், பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு வல்லுனர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட, அனைத்து பாடங்களின் முக்கிய கேள்விகள் அடங்கிய, ப்ளூ பிரிண்ட் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

தன்னம்பிக்கை, தைரியம் தந்த நிகழ்ச்சி

ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி குறித்த மாணவர்கள் பேட்டி: 

ஸ்ரீராம், ராம் நகர்: அனைத்து வினாக்களுக்கும் கஷ்டமில்லாமல் பதிலளிப்பது குறித்து விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டது. தேர்வில், 100 சதவீதம் பெறுவது குறித்து கூறியது பயனுள்ளதாக இருந்தது.

சுபம், பூமார்க்கெட்: தேர்வில் படித்த பாடங்களை, பிறரை விட வேறுபடுத்தி காட்டினால் எழுதில் மதிப்பெண்கள் பெறலாம் என்பதை அறிந்து கொண்டேன். ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை மட்டுமின்றி, தைரியத்தையும் வழங்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

கார்த்திகேயினி: அதிக மதிப்பெண் கள் எடுப்பதற்கு, எந்தெந்த பாடங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதை பாடவாரியாக விளக்கினர். ஆனந்தி: இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணி தம் ஆகிய முக்கிய பாடங்களில் கடினமான பகுதிகளை சுலபமாக படிக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். 

சரண்யா: தேர்வின் பொழுது, பாடங்கள் படிக் கும் நேரத்திலும் ஒவ்வொரு பாடத்திற் கும், கேள்விகளுக்கும் நேரத்தை ஒதுக்குவது குறித்து வழங்கிய ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us