தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேட்டுப்பாளையத்தில் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நாளை துவக்கம்!

மேட்டுப்பாளையத்தில் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நாளை துவக்கம்!

மேட்டுப்பாளையத்தில் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நாளை துவக்கம்!


UPDATED : டிச 04, 2015 12:00 AM

ADDED : டிச 04, 2015 02:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2015 12:00 AM ADDED : டிச 04, 2015 02:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்
: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில்
,   தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்  நிகழ்ச்சி நாளை, மேட்டுப்பாளையத்தில் துவங்கவுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, தேர்வை பயமின்றி எதிர்கொள்வது, நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது குறித்து, மாணவர்களுக்கு துறை சார்ந்த வல்லுனர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

இந்தாண்டு இந்நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனம், ஸ்ரீசக்தி பொறியியல் கல்லுாரி, ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆகியவை இணைந்து வழங்குகின்றன. மேட்டுப்பாளையம் கோ--ஆப்ரேட்டிவ் காலனி இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில், தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் நடக்கிறது.

பிளஸ் 2 சயின்ஸ் குருப் மாணவர்களுக்கு, நாளை (5ம் தேதி) காலை, 9:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், காரமடை வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உமாதேவி (தமிழ்), அனுராதா (ஆங்கிலம்), ஈஸ்வரன் (கணிதம்), இந்திரா (இயற்பியல்), மகேஷ் (வேதியியல்), இந்துமதி (தாவரவியல்), ரூத்சில்வியா (விலங்கியல்), நித்யா (கம்ப்யூட்டர் சயின்ஸ்) ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர்.

மதியம், 12:30 மணிக்கு நடைபெறும் கலைப்பிரிவு மாணவர்களுக்கு, உமாதேவி (தமிழ்), அனுராதா (ஆங்கிலம்), நித்யா (கம்யூட்டர் சயின்ஸ்), ஹேமா (வணிகவியல், கணக்குப்பதிவியல்), மகேஸ்வரி (பொருளியல்) ஆகிய ஆசிரியர் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (6ம் தேதி) காலை, 9:00 மணிக்கு, பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு, அதே பள்ளி ஆசிரியர் கீதா (தமிழ்), ரம்யா (ஆங்கிலம்), மலர்விழி (கணிதம்), அமலா சுனிதா (தாவரவியல், விலங்கியல்), சுஜாதா (இயற்பியல், வேதியியல்), இளங்கோவன் (சமூக அறிவியல்) ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர். 

மதியம், 12:30 மணி முதல் ஆங்கில வழி மாணவர்களுக்கும் அதே ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, முக்கிய கேள்விகள் அடங்கிய, ப்ளூ பிரிண்ட் புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us