தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெள்ளத்தை பற்றிஆய்வு கட்டுரை

வெள்ளத்தை பற்றிஆய்வு கட்டுரை

வெள்ளத்தை பற்றிஆய்வு கட்டுரை


UPDATED : டிச 05, 2015 12:00 AM

ADDED : டிச 05, 2015 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2015 12:00 AM ADDED : டிச 05, 2015 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: சென்னை வெள்ள பாதிப்பை
, மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதுகுறித்து ஆய்வு கட்டுரை தயாரிக்க, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

சென்னையை புரட்டிப்போட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால், லட்சக்கணக்கானோர் வீடு, உடமைகளை இழந்து தவிக்கின்றனர். தமிழகம் இதுவரை கண்டிராத இப்பாதிப்பு குறித்து, நாளிதழ்களில் பக்கம் பக்கமாக படங்களும், செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சென்னை மழை மற்றும் வெள்ள பாதிப்பை, வருங்கால இளைஞர்களான, மாணவர்கள் உணர வேண்டும்; அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்ற நோக்கில், இதுதொடர்பாக, ஆய்வு கட்டுரை தயாரிக்க, அரசு பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மறக்க முடியாத பேரழிவு ஏற்படும்போது, மாணவர்களும், அதுகுறித்து நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இச்சம்பவம், ஒரு பாடமாக, அவர்கள் மனதிலும் பதிய வேண்டும். எனவே, முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏற்படும்போது, ஆய்வுக்கட்டுரை தயாரிக்க, மாணவர்கள் அறிவுறுத்தப்படுவர்.

கல்பனா சாவ்லா மறைவு, குஜராத் நிலநடுக்கம், அப்துல் கலாம் மறைவு போன்ற தருணங்களில், இதுபோன்ற ஆவுக்கட்டுரைகளை தயாரிக்க, மாணவர்களை அறிவுறுத்தியிருந்தோம். அதேபோல், தற்போது, சென்னை வெள்ளம் குறித்து, மாணவர்கள் ஆராய்ந்து, கட்டுரையை தயாரித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us