UPDATED : டிச 08, 2015 12:00 AM
ADDED : டிச 08, 2015 10:57 AM
அ நிறம் | அளவு
கோவை:
பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,
தேசிய அளவிலான போட்டியில் விளையாட தேர்வு
பெற்றனர். சேலம் மாவட்டம், சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்
கல்வித்துறை சார்பில், பாரதியார், குடியரசு தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில்,
19 வயதுக்கு உட்பட்ட சிலம்பாட்டப் போட்டியின்,
65 கிலோ எடைப்பிரிவில் ஜி.கே.டி., பள்ளி மாணவி பிரேமி, மாநில அளவில் இரண்டாம் இடத்தை
பெற்றார். இதேபோல, இந்திய பள்ளிகள் விளையாட்டு ஆணையகம்
சார்பில் நடந்த கைப்பந்து போட்டியில், இதே பள்ளியை
சேர்ந்த மாணவர் பிரகதீஷ், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஜன., 2ல் டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான
போட்டிகளில் இருவரும் கலந்து கொள்கின்றனர்.
