UPDATED : டிச 09, 2015 12:00 AM
ADDED : டிச 09, 2015 10:23 AM
திருப்பூர்
: மாவட்ட அளவிலான போட்டித் தேர்வில் முதலிடம் வென்றவர்கள், தேசிய இளைஞர் விழாவின், மாநில போட்டித்
தேர்வில் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து நடந்தும் மாநில அளவிலான தேசிய இளைஞர் விழாவுக்கான போட்டித் தேர்வு, வரும், 13ல் நடக்கிறது. போட்டித்தேர்வானது, திருச்சி பூலாங்குளத்துப்பட்டி சிவான பொறியியல் கல்லூரியில், காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.
போட்டித்தேர்வில், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாட்டு, ஓரங்க நாடகம் (ஆங்கிலம் அல்லது ஹிந்தி), கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப்போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக் மற்றும் ஒடிசி நடனங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்ட அளவிலான போட்டித்தேர்வில், முதலிடம் வென்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். நுழைவுப்படிவத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலரின் கையொப்பம் பெறுதல் வேண்டும்.
தங்குவதற்கான இடவசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆண்கள், 9843636882 எண்; பெண்கள், 9952574154 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல், விபரம் அறிய, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை, 0421-2244899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
