தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் தரமற்ற உணவு; ஆசிரியர், சமையலர் இட மாற்றம்

பள்ளியில் தரமற்ற உணவு; ஆசிரியர், சமையலர் இட மாற்றம்

பள்ளியில் தரமற்ற உணவு; ஆசிரியர், சமையலர் இட மாற்றம்


UPDATED : டிச 12, 2015 12:00 AM

ADDED : டிச 12, 2015 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2015 12:00 AM ADDED : டிச 12, 2015 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உறைவிடப்பள்ளியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய தலைமையாசிரியர், சமையலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காடு மாரியம்மன் கோவிலூரில், உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 30 மலைவாழ் மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு தரமற்ற முறையில் உணவு வழங்கியதாக, சமையலர் வீராசாமி, தங்கபொண்ணு மற்றும் கவனிக்க தவறியதாக தலைமையாசிரியர் அரிபிரசாத் ஆகியோர் மீது, குற்றச்சாட்டு கூறி, பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். 

பாப்பிரெட்டிப்பட்டி தனி தாசில்தார் செந்தில் அரசன் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை கலெக்டர் விவேகானந்தனிடம் சமர்ப்பித்தார். இதன்படி தலைமையாசிரியரும், வார்டனுமாகிய அரிபிரசாத்தை, மாரியம்பட்டி அரசு ஆதி திராவிடப்பள்ளிக்கும், சமையலர் வீராசாமியை கடத்தூர் அரசு மாணவர் விடுதிக்கும் இடமாற்றம் செய்து, கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார். சமையலர் தங்கப்பொண்ணு அங்கிருந்து மாற்றப்பட்டு, காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us