தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரியில், ஷிப்ட் முறை, மாற்றமில்லாத மாற்றம்!

அரசு கல்லூரியில், ஷிப்ட் முறை, மாற்றமில்லாத மாற்றம்!

அரசு கல்லூரியில், ஷிப்ட் முறை, மாற்றமில்லாத மாற்றம்!


UPDATED : டிச 12, 2015 12:00 AM

ADDED : டிச 12, 2015 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2015 12:00 AM ADDED : டிச 12, 2015 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை
: உடுமலை
, அரசு கலைக் கல்லுாரியில், ஷிப்ட் முறையில் மாற்றமின்றி மீண்டும் பழைய முறையில் வகுப்புகளை நடத்த கல்லுாரி நிர்வாகம் ஒப்புகொண்டுள்ளது; நிரந்தர பேராசிரியர்கள் போதுமான அளவு நியமிக்கப்பட்டுள்ளதால், கல்வித்தரம் உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உடுமலை, அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில், 2,500 மாணவர்கள் படிக்கின்றனர். அரசு கல்லுாரியில் படிக்கும் பல மாணவர்களும் பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களை சார்ந்தே உள்ளனர். உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், உட்பட சுற்றுப்பகுதி ஏழை மாணவர்களின் உயர்க் கல்விக்கு அடித்தளமாக இக் கல்லுாரி விளங்குகிறது.

சுழற்சி முறையில் வகுப்புகள்

இதனால், கல்லுாரியில் சுழற்சி (ஷிப்ட்) முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உடுமலை அரசு கலைக் கல்லுாரியில், ஒவ்வொரு பிரிவிலும், 30 சதவீத மாணவர்கள் வகுப்பு முடிந்தவுடன் பணிக்கு செல்வோராக உள்ளனர். சுற்றுப்பகுதியிலுள்ள, சிறு சிறு கடைகளிலும், தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர்.

காலை, 8:45 முதல் 1:30 மணி வரை முதல் ஷிப்ட்டாகவும், மதியம், 1:30 முதல் 6:30 மணி வரை இரண்டவாது ஷிப்ட்டாகவும் வகுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. காலை, இயற்பியல், வேதியியல் உட்பட அனைத்து பிரிவு பாடங்களும், மதியம், பி.காம், பி.காம்;சி.ஏ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இரண்டாவது ஷிப்ட்டில், 500 மாணவர்களும், முதல் ஷிப்ட்டில், 2,000 மாணவர்களும் படிக்கின்றனர். மாணவர்கள், தங்கள் பணிக்கு செல்வதற்கு வசதியாக ஷிப்ட்களை தேர்வு செய்து படித்து வந்தனர்.

இப்பிரிவுகளுக்கு, 70 நிரந்தர பேராசிரியர்களும், பத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பேராசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நடப்பு மாத துவக்கத்திலிருந்து, 25 நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வகுப்புகளை நடத்துவதற்கு கூடுதல் பேராசிரியர்கள் இருப்பதால், பழைய ஷிப்ட் முறையில் மாற்றம் கொண்டுவர கல்லுாரி நிர்வாகம் திட்டமிட்டது.

இதன் அடிப்படையில், ஷிப்ட் முறையை மாற்றி, கலை மற்றும் அறிவியல் பிரிவாக பிரித்து ஷிப்ட் முறையை செயல்படுத்தியது. பல்கலைக்கழக தேர்வுக்கு பின்னர், அனைத்து வகுப்புகளுக்கும் இந்நடைமுறையை பின்பற்றவும், தேர்வு முடிந்த மாணவர்களுக்கு மட்டும் தற்போது அவ்வாறு வகுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் அறிவித்தது.

இதனால், பணிக்கு செல்லும் மாணவர்களுக்கு, வகுப்புகள் பாதிக்கப்படுவது அல்லது பணிக்கு செல்ல முடியாமல் போவது போன்ற பிரச்னைகள் நிகழும்; பழைய முறையிலேயே வகுப்புகளை நடத்த வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்கள் போராட்டம்

இருப்பினும், நிர்வாகத்தின் சார்பில் பதில் கிடைக்காத நிலையில், மாணவர்கள், அடுத்தகட்டமாக இரண்டு நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம், பழைய முறையிலேயே ஷிப்ட்களை அமைத்து பாடம் நடத்தப்படும் எனவும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும், கல்லுாரி நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, நேற்று முதல் வகுப்புகள் வழக்கமாக செயல்பட்டன.

உடுமலை எலையமுத்துார் ரோட்டில், அரசு கலைக்கல்லுாரி அமைந்துள்ளது. அவ்வழித்தடத்தில், குறைவான எண்ணிக்கையில்தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் தொலைதுாரம் சென்று பஸ்சுக்கு காத்திருக்க வேண்டி வருகிறது. பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்கள் தனியார் பஸ்களையும் பயன்படுத்த முடியாமல், மழை பெய்யும் நாட்களில் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில நாட்களில் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வர முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. கல்லுாரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் இவ்வழித்தடத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க, போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us