தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி;மாணவ, மாணவியர்கள் குவிந்தனர்!

ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி;மாணவ, மாணவியர்கள் குவிந்தனர்!

ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி;மாணவ, மாணவியர்கள் குவிந்தனர்!


UPDATED : டிச 14, 2015 12:00 AM

ADDED : டிச 14, 2015 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2015 12:00 AM ADDED : டிச 14, 2015 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் நாளிதழ் மற்றும் கல்வி மலர் சார்பில் சிதம்பரத்தில் நேற்று நடந்த ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக, ஜெயித்துக் காட்டுவோம் என்கிற தன்னம்பிக்கை நிகழ்ச்சி, ஆண்டு தோறும் பல்வேறு ஊர்களில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சிதம்பரம் பகுதி மாணவர்களுக்காக கடலுார் மாவட்டம் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

மாணவ மாணவிகள் காலை முதலே ஆர்வமுடன் வரத் துவங்கினர். மாணவ, மாணவிகளுக்கு பாடவாரியாக கேள்விகள் அடங்கிய புளு பிரிண்ட், அரசு செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் என்ற தன்னம்பிக்கை ஏற்படுத்தும் புத்தகம், உடல் ஆரோக்கியத்திற்கு ஆலோசனை வழங்கும் உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் புத்தகம், குறிப்பெடுக்க நோட்டு மற்றும் பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பத்தாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி காலை 9.00 மணி முதல் மதியம் 1:00 வரை நடந்தது. தஞ்சை மாவட்டம் பெருமகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலசுப்ரமணியன், தமிழ் பாடத்திற்கும், கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை அனிதா ஆங்கில பாடத்திற்கும், புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை துணை ஆய்வாளர் வீரப்பன் கணித பாடத்திற்கும், தியாகதுருவம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மணிகண்டன் அறிவியல் பாடத்திற்கும், கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இலியாஸ் டேவிட் சமூக அறிவியல் பாடத்திற்கும் கருத்துரை வழங்கினர்.

பிளஸ் 2 வகுப்பு

பிற்பகல் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி 1 மணிக்கு துவங்கியது. இதில் புதுச்சேரி மாநில பயிற்சி மைய ஆசிரியர் பூபதி இயற்பியல் பாடத்திற்கும், கடலுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாரி வேதியியல் பாடத்திற்கும், திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் முல்லை வாணன் தாவரவியல் பாடத்திற்கும், கடலுார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவி விலங்கியல் பாடத்திற்கும் கருத்துரை வழங்கினர். புதுச்சேரி கல்வித்துறை ஆசிரியர் ஸ்ரீதரன் கணிதம் பாடத்திற்கும், புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சவுந்திரபாண்டியன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கும், திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியர் சிவராமரெட்டி வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடத்திற்கும், கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இலியாஸ் டேவிட் பொருளாதார பாடத்திற்கும் கருத்துரை வழங்கினர்.

பதக்கம் வழங்கல்

தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், கடந்த ஆண்டு, சாதித்த மாணவ மாணவியருக்கு, தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., உருவம் பதித்த வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2ம் இடமும், கடலுார் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி பூஜா, 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ம் இடமும், மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்ற புவனகிரி மங்களம் மெட்ரிக் பள்ளி மாணவி வினிதாஸ்ரீ ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் உற்சாகம்

நிகழ்ச்சியில் பாட வாரியாக கேள்விகள் கேட்டு, பரிசு வழங்கியதால் மாணவ, மாணவிகள் உற்சாகமடைந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்க முதலில் வந்த 15 பேருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மாணவர்கள் தங்களை, உடல் மற்றும் மன ரீதியாக பொதுத் தேர்விற்கு தயார்படுத்திக் கொள்வது, அதிக மதிப்பெண் பெற எளிய வழிமுறைகள், பாடவாரியாக முக்கிய வினாக்கள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. காமராஜ் மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் ஷீலா பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us