தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்

அண்ணா பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்

அண்ணா பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்


UPDATED : டிச 14, 2015 12:00 AM

ADDED : டிச 14, 2015 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2015 12:00 AM ADDED : டிச 14, 2015 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: முதலாம் ஆண்டு தேர்வில் மாற்றம் கோரி
, மாணவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, டிச., 16, 18ம் தேதிக்கான தேர்வுகளை, அண்ணா பல்கலை தள்ளி வைத்துள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, டிச., 7 முதல் செமஸ்டர் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், பருவ மழை காரணமாக தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்ட தால், டிச., 15 முதல் தேர்வு நடக்கும் என, புதிய பட்டியலை அண்ணா பல்கலை அறிவித்தது.

அதே நேரம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் மாதிரி தேர்வு நடத்தவில்லை. தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கவில்லை; குறைந்த வேலை நாட்களே இருந்ததால் இன்னும், போர்ஷன் முடிக்கவில்லை. எனவே, தேர்வு தேதியை தள்ளி போட வேண்டும் என, பல இன்ஜி., கல்லுாரிகள் சார்பில், அண்ணா பல்கலையின் தேர்வுத் துறைக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

ஆனால், தேர்வை தள்ளி வைத்தால், மே மாத செமஸ்டர் தேர்வு நாட்களில் பிரச்னை ஏற்படும் என கருதி, தேர்வை தள்ளி வைக்க, அண்ணா பல்கலை மறுத்து விட்டது. இந்நிலையில், தனியார் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், நேற்று, அண்ணா பல்கலை முன் திரண்டு, தேர்வை தள்ளி வைக்க கோரி, போராட்டம் நடத்தினர்; போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். மாணவர் பிரதிநிதிகளிடம், பல்கலை பதிவாளர் கணேசன் பேசிய போது, தேர்வுகளுக்கு இடையில் விடுமுறை இல்லை; தொடர்ச்சியாக தேர்வுகளை வைக்க வேண்டாம் என, மாணவர்கள் கூறினர்.

இதையடுத்து, டிச., 16, 18ம் தேதியில் நடக்க இருந்த தேர்வை தள்ளி வைக்க அண்ணா பல்கலை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

சமூக வலைதளத்தால் திரண்ட மாணவர்கள்:

சமீப காலமாக, அமைப்புகள் மற்றும் சங்கங்கள் மூலம் ஒன்றிணைவதை தாண்டி, தற்போது சமூக வலைதளங்கள் மூலம், குழுக்களாக சேர்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் மூலம் ஒன்றிணைகின்றனர்.

சமீபத்தில், சென்னையை புரட்டிப் போட்ட பெருமழை, வெள்ளம் பற்றிய தகவலை பரிமாறவும், உதவிகள் செய்யவும், டுவிட்டரில், சென்னை மழை குறித்து, #Chennai rain தனியாக, ஹேஷ் டேக் உருவாக்கி, அதன் மூலம் எளிதில் இணைந்தனர்.

இதேபோல், நேற்று நடந்த அண்ணா பல்கலை போராட்டத்திலும், மாணவர்கள், டுவிட்டர் மூலமே இணைந்துள்ளனர். அண்ணா பல்கலை தேர்வை தள்ளிவை என்ற கோரிக்கையுடன், #postponeausem என, தனியாக, ஹேஷ் டேக் உருவாக்கி, அதன் மூலம் கருத்துகளை பரிமாறி, போராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us