மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ்; நகல் வழங்க சிறப்பு முகாம்கள்
மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ்; நகல் வழங்க சிறப்பு முகாம்கள்
UPDATED : டிச 15, 2015 12:00 AM
ADDED : டிச 15, 2015 10:32 AM
வேலூர்
: மழையால்
பாதித்த மாணவர்களுக்கு, கல்வி சான்றிதழ் நகல் வழங்க, விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின்
சார்பில் நடத்தப்பட்டது.
இது குறித்து, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் அமுல்தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க விண்ணப்பம் அளிக்கும் சிறப்பு முகாம்கள் அந்தந்த கலைக்கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. வரும், 28ம் தேதி வரை நடக்கிறது.
இது தவிர வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்திலும் முகாம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு, மழையால் இழந்த சான்றிதழ்களின் நகலை பெற்றுக் கொள்ள விண்ணப்பம் வழங்கலாம். விண்ணப்பித்தவர் விவரங்கள் கணினியில் சரி பார்த்து அவர்களுக்கு சான்றிதழ் நகல் விரைவில் வழங்கப்படும். முதல் நாளில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் சிறப்பு முகாமில், 200 பேர், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் சிறப்பு முகாமில், 50 பேர் சான்றிதழ் நகல் கேட்டு விண்ணப்பம் வழங்கினர். இவ்வாறு அவர் கூறினார்.
