தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு வகுப்பு புறக்கணிப்பு; கல்வி, உடல் திறனில் மந்தம்

விளையாட்டு வகுப்பு புறக்கணிப்பு; கல்வி, உடல் திறனில் மந்தம்

விளையாட்டு வகுப்பு புறக்கணிப்பு; கல்வி, உடல் திறனில் மந்தம்


UPDATED : டிச 16, 2015 12:00 AM

ADDED : டிச 16, 2015 10:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2015 12:00 AM ADDED : டிச 16, 2015 10:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எஜூஸ்டோர்ட்ஸ் என்ற தனியார் அமைப்பு, கர்நாடகா உட்பட, நாட்டின், 26 மாநிலங்களின், 87 நகரங்களில், நுாற்றுக்கணக்கான பள்ளிகளில், 5 - 17 வயது வரையிலான மாணவர்களை ஆய்வு செய்தது.

இந்த ஆய்வில், உடல் கல்வி பயிற்சி குறைவாக உள்ள பள்ளி மாணவர்களின் கல்வித்திறன், உடல் திறன் குறைவாக இருப்பது தெரிந்தது. அதே நேரத்தில், அதிக உடல் கல்வி பயிற்சி நடத்தும் பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் நன்றாக இருந்ததுடன், அவர்களின் உடலும் ஆரோக்கியமாக இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:

விளையாட்டு, உடற்பயிற்சி குழந்தைகளின் மனம், உடல் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமானவை என்ற விழிப்புணர்வு, இந்திய மக்களிடம் இருந்தும், சமீபகாலமாக குழந்தைகளின் உடல் திறன் குறைந்து வருவது கவலைப்பட வேண்டிய விஷயம்.

பெற்றோர் இதுகுறித்து, எச்சரிக்கை அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது. படிப்புக்கு முக்கியத்துவம் தருவது போல், உடற் கல்வி பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் கல்வித்திறன் மட்டுமின்றி, உடல் திறனும் பெறுவர். கல்வியுடன் விளையாட்டுக்கும் போதுமான நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us