UPDATED : டிச 17, 2015 12:00 AM
ADDED : டிச 17, 2015 10:25 AM
சென்னை பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட, பிரான்ஸ் நாட்டு மாணவன் ஜோனஸ் ஆன்டன் புலேந்திர ராசா கூறியதாவது:
நேற்று முன்தினம், 11:30 மணியளவில், பல்கலையில் கருத்தரங்கம் நடந்த அரங்கிற்கு சென்றேன். அங்கு, அரசு அதிகாரி ஒருவர் பேசி கொண்டிருந்தார். அவரிடம், கேள்வி கேட்க முற்பட்டேன்.
தாக்குதல்
உடனே,
அங்கிருந்த பல்கலை ஊழியர்கள் மற்றும்
தேர்வாணையர் என்னை தடுத்து, என் இடது தோளில் பலமாக அமுக்கி,
என்னை அமர செய்தனர். பின், என்னை அவர்கள் முறைத்து பார்த்து கொண்டிருந்தனர். நான் வெளியே செல்ல
முற்பட்டேன்; என்னை அங்கிருந்த சிலர் தாக்கினர்.
தலையில் மூன்று அடி, தலைக்கு பின்னால், இரண்டு அடி விழுந்தது. அப்போது சில மாணவர்கள் எனக்கு உதவினர்.
நாங்கள்
துணைவேந்தரின், பி.ஏ.,வை சந்திக்க சென்றோம். அவர், என்னை
பார்த்ததும் என் உடை குறித்து கேள்வி எழுப்பினார். அதன்பின், நாங்கள், துணைவேந்தரிடம் சென்றோம். அவர்,
நடந்த சம்பவத்திற்கு அவர்கள் சார்பாக, நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். உடனே
நாங்கள், அதை எழுத்துபூர்வமாக கொடுங்கள் என்றோம். அதற்கு, அவர் மறுத்து விட்டார். நான் மருத்துவமனைக்கு சென்று விட்டேன்.
அப்போது, சில மாணவர்கள், துணைவேந்தர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
மேலும், தான்சானியாவில் இருந்து வந்த மாணவன் ஒருவன், பதிவாளரிடம், எங்களுக்கு என்ன பாதுகாப்பு
கொடுக்கிறீர்கள் என, கேள்வி கேட்டான். அதற்கு, அவருடன் இருந்த
ஊழியர்கள், உங்களால் தான் பிரச்னை; எங்கள் நாட்டை விட்டு வெளியே போங்கள்! என, கெட்ட வார்த்தையில் திட்டினர்.
அவர்களின்
அநாகரிக நடவடிக்கையை பதிவாளர் தடுக்கவில்லை. பதிவாளரின் இந்த செயல், மிகவும் மன வேதனையை அளித்துள்ளது. இந்த சம்பவம், பல கனவுகளுடன், இந்தியா வரும் வெளிநாட்டு
மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், எங்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
கருத்தரங்கின்
போது,துணைவேந்தர் முன்னிலையில் என்னை தாக்கினர்;
கேள்வி கேட்டது தப்பா; கேள்வி கேட்கக்கூடாது என்றால், அதை சொல்லி இருக்கலாம்; அதற்கு தனி
நேரம் ஒதுக்கப்படும் என, தெரிவித்திருக்கலாம்.
நம்பிக்கை
உள்ளது
இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளேன்; பிரான்ஸ் துாதரகத்திலும் புகார் செய்து உள்ளேன். என் குடும்பத்தாரிடம் நடந்த சம்பவத்தை கூறியபோது, உடனே, பிரான்ஸ் நாட்டிற்கு வந்து விடு என்றனர். கல்வி வளாகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா&' என, அதிர்ச்சியுடன் கேட்டனர்.
ஆனால், நான் திரும்பி வர போவது இல்லை&' என்று கூறி விட்டேன். எனக்கு, இங்குள்ள, போலீஸ் மற்றும் சட்டத்தின் மீது
நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இரண்டாம் நாளாக
போராட்டம்
நேற்று காலை, 10:00 மணியளவில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலையின்
பிரதான கட்டட நுழைவாயில் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவரை
தாக்கிய செயலுக்கு நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என,வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைந்து போகுமாறு போலீசார் கூறினர். ஆனால், மாணவர்கள் கலைய மறுத்தனர். இதனால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட, 41 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூகநலக் கூடத்தில், தங்க வைக்கப்பட்டனர். வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, தேர்வுகள் மட்டுமே நடந்தன. இதையடுத்து, ஜன., 3ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டது; மேலும்,தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.
