பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை
பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை
UPDATED : டிச 17, 2015 12:00 AM
ADDED : டிச 17, 2015 10:35 AM
குன்னுார்
: பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்க மேலாண்மை குழுவினர்
முன்வர வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும்
கல்வி இயக்கம், குன்னுார் வட்டார வள மையத்தின் கீழ்
செயல்படும் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான, 3 நாட்கள் குறுவள மைய அளவிலான பயிற்சி முகாம், குன்னுாரில் நடந்தது.
பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜான்சிராணி துவங்கி வைத்து பேசுகையில், பள்ளிகளின் வளர்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களான பெற்றோர், மகளிர் குழுக்கள், உறுப்பினர்களின் பங்கு அவசியம். பள்ளிக்கு, குழந்தைகளின் வருகையை அதிகரிக்க மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்வர வேண்டும். இதற்காக அரசு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. தங்களது உரிமைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக, குன்னுார் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, வண்டிச்சோலை நகராட்சி நடுநிலைப்பள்ளி, காந்திபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முதற்கட்டமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, என்றார்.
வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பாஸ்கரன், பயிற்சி அளித்தார். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் மாலதி, சத்யகலா, ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் குன்னுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட,63 அரசுப்பள்ளிகளில் இருந்து, 315 பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களுக்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
