UPDATED : டிச 17, 2015 12:00 AM
ADDED : டிச 17, 2015 10:38 AM
கடம்பத்துார்
: அரசு
பொது தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கு, சிறப்பு உளவியல் ஆலோசனை வழங்கும் முகாம், கடம்பத்துாரில் நேற்று நடந்தது.
கன மழையால்,
பள்ளிகளுக்கு தொடர்ந்து, 34 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழை குறைந்ததால், கடந்த, 14ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர் விடுமுறையால் அரசு பொது தேர்வு
எழுதவுள்ள மாணவர்கள், மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு, சிறப்பு உளவியல் ஆலோசனைகள் வழங்கும் முகாம், மாவட்டம் முழுவதும், நேற்று முதல் நடைபெறுகிறது.
கடம்பத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இம்முகாமிற்கு, பள்ளிகள் துணை ஆய்வாளர் ராமமூர்த்தி முன்னிலை வகிக்க, மாவட்ட கல்வி அலுவலர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி, வேலுார் மாவட்ட உளவியல் ஆலோசகர் நந்தினி ஆகியோர், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கினார். முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
