UPDATED : டிச 18, 2015 12:00 AM
ADDED : டிச 18, 2015 11:00 AM
அ நிறம் | அளவு
கோவை
:
எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில்
இளங்கலை, முதுகலை பருவத்தேர்வு முடிவுகள் இன்று
மாலை வெளியிடப்படுகிறது.
எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில், 14 இளங்கலை மற்றும், 7 முதுகலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படிப்புகளுக்கான பருவத் தேர்வு கடந்த நவ., டிச., மாதங்களில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், இன்று மாலை, 6:00 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவுகளை, www.drsnsrcas.ac.in என்ற இணையதள முகவரியிலும், கல்லுாரி வளாக அறிவிப்பு பலகையிலும் தெரிந்துகொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம்தெரிவித்துள்ளது.
