சுருக்கெழுத்தர், தட்டச்சு பணி கல்வி தகுதி; அரசு அறிவிப்பு
சுருக்கெழுத்தர், தட்டச்சு பணி கல்வி தகுதி; அரசு அறிவிப்பு
UPDATED : டிச 18, 2015 12:00 AM
ADDED : டிச 18, 2015 11:06 AM
பெங்களூரு
: அரசின் பல்வேறு துறைகளில், சுருக்கெழுத்தர்
அல்லது தட்டச்சு பணிகளுக்கு விண்ணப்பிக்க, பி.யூ.சி.,
அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருக்க
வேண்டும் என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு உத்தரவில்
குறிப்பிட்டு உள்ளதாவது:
இதுவரை அரசின்
பல்வேறு துறைகளில், சுருக்கெழுத்தர், தட்டச்சு பணிகளுக்கு, 10ம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்கள், விண்ணப்பித்து, வேலைவாய்ப்பை பெறலாம். ஆனால் தற்போது, இப்பணிகளுக்கான கல்வித்தகுதி, பி.யூ.சி.,யாக உயர்த்தி, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்காக, கர்நாடக பொது சேவைகள், சுருக்கெழுத்தர், தட்டச்சு நியமனம் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் படி, சுருக்கெழுத்தர், தட்டச்சு பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், பி.யூ.சி., அல்லது அதற்கு சமமான கோர்ஸ்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
