ஜெ., கோரிக்கை நிராகரிப்பு; ஐ.ஏ.எஸ்., தேர்வு துவக்கம்
ஜெ., கோரிக்கை நிராகரிப்பு; ஐ.ஏ.எஸ்., தேர்வு துவக்கம்
UPDATED : டிச 19, 2015 12:00 AM
ADDED : டிச 19, 2015 11:16 AM
சென்னை
: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 உயர் பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் பிரதான தேர்வு, நேற்று துவங்கியது.
முதல் நிலைத் தேர்வில், நாடு முழுவதும், 4.5 லட்சம் பேர் பங்கேற்று, 15 ஆயிரம் பேர் பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான பிரதான தேர்வு, நேற்று துவங்கியது. சென்னை, அண்ணா சாலையில் உள்ள, காயிதே மில்லத் மகளிர் கல்லுாரியில், தேர்வு மையம் அமைக்கப்பட்டது.தமிழகம் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த, 855 பேர் தகுதி பெற்றிருந்தனர்; ஆனால், 840 பேர் பங்கேற்றனர். இன்றும் தேர்வு நடக்கிறது. அதன் பின், 21 முதல், 23 வரை தொடர்ந்து, தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர், இறுதி சுற்றான நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப் படுவர்.
மழை காரணமாக, இந்த தேர்வை தள்ளிவைக்க, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
